இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் இன்று பரபரப்பான ஒரு செய்தியை கூறியிருக்கிறார். ’’ இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளது. பலமொழி பேசும் மக்கள் உள்ளார்கள். பண்பாட்டு ரீதியாகவும் கலாச்சாரத்திலும் இந்தியாவில் மக்கள் வேறுபட்டுள்ளார்கள். இந்தியாவில் ஆட்சி புரியும் அரசுகள் பல்வேறு இனங்களைகொண்ட மக்களை அவர்களின் முகவரியை அழிக்கும் வேளையில் செய்கிறார்கள். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்திய நாடு முழுவதும் பிரிவிணை வாதம் தூக்கியுள்ளது. மொழி ரீதியாக இன ரீதியாக மத ரீதியாக காற்று ,நீர், என எல்லாமே பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது.
பாஜக இந்தியாவை காவி மயமாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பட்டமக்களை கடுமையாக நசுக்குகிறது. இது நாகரீக உலகிற்கு உகந்ததல்ல. ஏற்கனவே ஐரோப்பா கண்டத்திலுள்ள ஜெர்மன், பிரான்ஸ் போல பல்வேறு இன, மொழி பேசும் மக்கள் தனித்தனியாக அவர்களது சுயாட்சி முறையை நிலைநிறுத்துவது போல இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களூம் தனித்தனி நாடாகி ஒவ்வொரு மாநிலங்களும் தனி நாடு என்ற அங்கீகாரம் பெற்று அதனுடைய கூட்டமைப்பாக இந்தியா இருக்க வேண்டும். இந்த நிலை நம் காலத்திலேயே வரப்போகிறது ’’என தா.பாண்டியன் தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறியுள்ளார். இது இந்திய அளவில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.