Skip to main content

மோடி மற்றும் பத்து மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 21/03/2018 | Edited on 21/03/2018
mkstalin

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு எதிராக பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜி.எஸ்.டி. கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து உடனடியாக திருத்தியமைக்க வேண்டும் என்று பிரதமர் – மத்திய நிதியமைச்சர் மற்றும் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா, புதுச்சேரி, டெல்லி, தமிழ்நாடு ஆகிய பத்து மாநில முதலமைச்சர்களுக்கும் தனித்தனியே கடிதம் இன்று (21-3-2018) அனுப்பியுள்ளார். 
 
அக்கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:-
 
மாண்புமிகு முதல்வருக்கு, வணக்கம்
 
தாங்கள் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மாநிலங்களின் நிதி தன்னாட்சியைப் பாதிக்கும் பதினைந்தாவது மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் குறித்து மிக முக்கியமான விஷயங்களை தங்களுக்கு தெரிவிக்க விழைகிறேன். மத்திய அரசு வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு சமமான மற்றும் நியாயமான நிதி பகிர்வு கிடைப்பதற்கு இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வு வரம்புகள் உதவி செய்யாது என்ற எனது கவலையை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
2001 ஆம் ஆண்டு வரையிலும் அதற்கு பிறகும் நடைபெறும் அனைத்து தொகுதி மறுசீரமைப்புகளுக்கும் 1971 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புதான் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்ப்டடுள்ள 42-வது அரசியல் சட்ட திருத்தத்தின் பிரிவு 15 உறுதி செய்துள்ளது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான திட்டங்களை சரி வர செயல்படுத்தாத மாநிலங்களைக் காட்டிலும் அத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியுள்ள மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற அச்சத்தைப் போக்கவே அந்த உறுதி அளிக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 84 ஆவது அரசியல் சட்ட திருத்தப் பிரிவு 3-ன்படி மேற்கண்ட உறுதி (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு) 2026 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால்தான் “மக்கள் தொகை அடிப்படையிலான நிதி பகிர்வில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கடைப்பிடிக்கப்படும்” என்று 1976-க்கு பிறகு அமைக்கப்பட்ட அனைத்து மத்திய நிதி ஆணையத்திற்கும் ஆய்வு வரம்பு தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வந்தது.  ஆனால் முதல் முறையாக மாநிலங்களைக் கூட கலந்து ஆலோசிக்காமல் மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்பு மாற்றப்பட்டுள்ளது.
 
அப்படி மாற்றப்பட்டு ஆய்வு வரம்புகளை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்:
 
-ஆய்வு வரம்பு 4(ii)ன்படி “மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் மாநிலங்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிதி பங்கீடு பரிந்துரை செய்யலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
 
-ஆய்வு வரம்பு 5-ல் “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி பங்கீடு குறித்து ஆணையம் பரிந்துரை செய்யலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த இரு ஆய்வு வரம்புகளும் தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயிலிருந்து நிதி கிடைப்பதில் ஒட்டு மொத்தமாக மோசமான தாக்கத்தை உருவாக்கும். 2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்திற்கு கிடைக்கும் நிதி தலைகீழாக குறையும் என்பது ஒரு புறமிருக்க, மக்கள் தொகை கட்டுப்பாட்டை நீண்ட காலத்திற்கு முன்பே கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதால் ஆய்வு வரம்பு 4-ன் படி நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகைக்கான பங்களிப்பையும் இழக்க நேரிடும். அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மத்திய அரசு இந்த நிதி ஆணையத்திற்கு நிர்ணயித்துள்ள மக்கள் தொகை ஆய்வு வரம்பு மாநில நிதி தன்னாட்சிக்கு எதிர்மறையாக இருக்கிறது. மிக மோசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு வரம்பு மாற்றங்கள் மத்திய வரி வருவாயிலிருந்து முன்னேறிய மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெருமளவு குறைத்து விடும் அபாயம் ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலிருக்கும் மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயில் பெரும் பகுதியை திருப்பி விடுவதற்கு வித்திட்டு விடும்.

பதினைந்தாவது நிதி ஆணையத்தின் 4(iii)ஆய்வு வரம்பு “ மத்திய அரசின் முக்கியத் திட்டங்களை நிறைவேற்றியுள்ள மாநிலங்கள்” என்ற அடிப்படையிலும் நிதி பகிர்வில் ஊக்கத்தொகை பரிந்துரைக்கலாம் என்று கூறுகிறது. முன்னேறிய மாநிலங்கள் தங்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் முக்கியமான சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி அதில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் மத்திய அரசு இப்படி முக்கியத் திட்டங்களை அறிவிக்கும் முன்பே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எல்லாம் சிறப்பான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றன. குறிப்பாக பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாடு போன்ற மாநிலம் அனைவருக்கும் மின்சாரம், அனைத்து கிராமங்களுக்கும்  சாலை வசதிகள்,  வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு எல்லாம் ரேசன் கார்டுகள், அனைவருக்கும் சமையல் எரிவாயு போன்ற திட்டங்களை மத்திய அரசின் திட்டங்களுக்கு முன்பே வெற்றி கரமாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது.  ஆகவே மத்திய திட்டம், மாநில திட்டம் என்று பாகுபாடு பார்க்காமல் தங்கள் மாநிலங்களில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியிருக்கும் மாநிலங்களுக்கு நிதி பகிர்வு செய்து கொடுக்க பரிந்துரைப்பதற்கு பதிலாக மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு மட்டும் ஊக்கத் தொகை என்று 4(iii)-ல் சொல்லப்பட்டுள்ள ஆய்வு வரம்பு பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல- மிகுந்த கண்டனத்திற்குரியது.
 
இன்னொரு ஆய்வு வரம்பான 4(Viii) “ஒரு வரையறைக்குள் கவர்ச்சித் திட்டங்களுக்கு செலவு செய்தது அல்லது அப்படி வரையறை ஏதுமின்றி கவர்ச்சித்திட்டங்களுக்கு செலவு செய்தது” என்ற அடிப்படையில் மத்திய நிதி ஆணையம் நிதி பகிர்வு குறித்து பரிந்துரை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு நிதி ஆணையம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு நிறைவேற்றும் திட்டத்தில் எது கவர்ச்சித் திட்டம் என்று முடிவு செய்வது அடிப்படையில் ஜனநாயக விரோதமானது. மாநிலங்களுக்கு எதிராக இப்படியொரு சிறிய கமிட்டிக்கு எதேச்சாதிகார அதிகாரத்தை வழங்க யாருக்கு உரிமை இருக்கிறது? இது அரசியல் சட்ட விரோதம் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை மீறும் செயல் என்றும் நான் நம்புகிறேன். முன்பு அமைக்கப்பட்ட மத்திய நிதி ஆணையங்களின் ஆய்வு வரம்பில் “உதவி தேவைப்படும் மாநிலங்கள்” என்று இருந்த வாசகம் பதினைந்தாவது மத்திய நிதி ஆணைய ஆய்வு வரம்பில் இடம்பெறவில்லை என்பதால், 1(ii) என்ற ஆய்வு வரம்பின் கீழ் “வருவாய் இடைவெளி” அடிப்படையில் மாநிலங்களுக்கு மத்திய நிதி ஆணையம் எந்த உதவியும் செய்யப் போவதில்லை என்று தெரிகிறது. ஆகவே மாநிலங்களின் கருத்துக்களை பெறாமல் நியமிக்கப்பட்ட மத்திய நிதி ஆணைய உறுப்பினர்களுக்கு மாநிலங்களில் நிறைவேற்றப்படும் திட்டங்களில் “கவர்ச்சித்திட்டம்” எது என்று நிர்ணயிக்கும் உரிமையைக் கொடுத்திருப்பது மாநில உரிமைகள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்றே கருதுகிறேன். வருவாய் பற்றாக்குறையை படிப்படியாக நீக்க வேண்டிய பொறுப்பு எப்போதும் மாநிலங்களிடமே இருக்க வேண்டும். அந்த பொறுப்பு தொடர வேண்டும் என்று கருதுகிறேன். மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களில் சிலவற்றை “கவர்ச்சித் திட்டங்கள்” என்று மத்திய நிதி ஆணையம் பிரித்து, அதற்கான செலவுகளை மாநிலத்தின் ஒட்டு மொத்த செலவிலிருந்து குறைத்து விட்டு (மாநிலத்தின் கருத்தைக் கேட்காமலேயே) மத்திய வரி வருவாயிலிருந்து நிதி பகிர்வை பரிந்துரைத்து விட்டால் மாநிலங்களின் நிதி நிலைமை என்ன ஆவது? என்ற கேள்வி எழுகிறது.
 
கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம் என்று மத்திய அரசு பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால் ஐந்து வருடங்கள் மாநிலங்களின் சிறப்பான நிர்வாகத்திற்கு தேவையான நிதி பகிர்வை பரிந்துரை செய்யும் மத்திய நிதி ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள ஆய்வு வரம்பு கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாக மட்டுமல்ல- சிறப்பாக செயல்படும் மாநிலத்தின் நிதி சரியாக செயல்படாத மாநிலத்திற்கு கிடைக்கும் நிலையை உருவாக்கி விட்டது.
 
மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக இருக்கும் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு வரம்பு 3(V)ன்படி ஜி.எஸ்.டி செயல்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய நிதி ஆணையம் ஆய்வு செய்யும் போது, ஜி.எஸ்.டி கவுன்சிலில் இது குறித்து முன் கூட்டியே விவாதித்து மாநிலங்களிடமிருந்து ஒரு ஆலோசனையை  மத்திய நிதி அமைச்சர் பெற்றிருக்க வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது. மொத்தத்தில் மத்திய நிதி ஆணையத்தின் முறையாக தயாரிக்கப்படாத ஆய்வு வரம்பினால் மாநிலங்களின் நிதி தன்னாட்சி ஏதோ ஒரு நகராட்சியின் அந்தஸ்துக்கு தரம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றன என்று நினைப்பது நியாயமானது என்றே எண்ணுகிறேன்.
 
ஆகவே மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு எதிராக பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜி.எஸ்.டி. கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து  திருத்தியமைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு தாங்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிப்பகிர்வினால் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாமலும், அந்த அநீதி மூலம் மாநிலங்களில் மனக்குறையும் மனக்குமறுலும் ஏற்பாடம் இருக்கவும் மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்பில் திருத்தங்கள் கொண்டு வருவது மட்டுமே ஒரே வழி என்று நான் எண்ணுகிறேன்.
 
நிறைவாக தாங்கள் நலமுடன் இருக்கவும், மாநில மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக தாங்கள் முன்னின்று எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.  
 
பிரதமர் – மத்திய நிதியமைச்சர் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் 
 
தாங்கள் பூரண நலத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மாநிலங்களின் நிதி தன்னாட்சியைப் பாதிக்கும் பதினைந்தாவது மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் குறித்து மிக முக்கியமான விஷயங்களை தங்களுக்கு தெரிவிக்க விழைகிறேன். மத்திய அரசு வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு சமமான மற்றும் நியாயமான நிதி பகிர்வு கிடைப்பதற்கு இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வு வரம்புகள் உதவி செய்யாது என்ற எனது கவலையை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
2001 ஆம் ஆண்டு வரையிலும் அதற்கு பிறகும் நடைபெறும் அனைத்து தொகுதி மறுசீரமைப்புகளுக்கும் 1971 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புதான் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்ப்டடுள்ள 42-வது அரசியல் சட்ட திருத்தத்தின் பிரிவு 15 உறுதி செய்துள்ளது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான திட்டங்களை சரி வர செயல்படுத்தாத மாநிலங்களைக் காட்டிலும் அத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியுள்ள மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற அச்சத்தைப் போக்கவே அந்த உறுதி அளிக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 84 ஆவது அரசியல் சட்ட திருத்தப் பிரிவு 3-ன்படி மேற்கண்ட உறுதி (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு) 2026 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால்தான் “மக்கள் தொகை அடிப்படையிலான நிதி பகிர்வில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கடைப்பிடிக்கப்படும்” என்று 1976-க்கு பிறகு அமைக்கப்பட்ட அனைத்து மத்திய நிதி ஆணையத்திற்கும் ஆய்வு வரம்பு தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வந்தது.  ஆனால் முதல் முறையாக மாநிலங்களைக் கூட கலந்து ஆலோசிக்காமல் மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்பு மாற்றப்பட்டுள்ளது.
 
அப்படி மாற்றப்பட்டு ஆய்வு வரம்புகளை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்:
 
-ஆய்வு வரம்பு 4(ii)ன்படி “மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் மாநிலங்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிதி பங்கீடு பரிந்துரை செய்யலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
 
-ஆய்வு வரம்பு 5-ல் “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி பங்கீடு குறித்து ஆணையம் பரிந்துரை செய்யலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

mkstalin modi

இந்த இரு ஆய்வு வரம்புகளும் தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயிலிருந்து நிதி கிடைப்பதில் ஒட்டு மொத்தமாக மோசமான தாக்கத்தை உருவாக்கும். 2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்திற்கு கிடைக்கும் நிதி தலைகீழாக குறையும் என்பது ஒரு புறமிருக்க, மக்கள் தொகை கட்டுப்பாட்டை நீண்ட காலத்திற்கு முன்பே கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதால் ஆய்வு வரம்பு 4-ன் படி நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகைக்கான பங்களிப்பையும் இழக்க நேரிடும். அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மத்திய அரசு இந்த நிதி ஆணையத்திற்கு நிர்ணயித்துள்ள மக்கள் தொகை ஆய்வு வரம்பு மாநில நிதி தன்னாட்சிக்கு எதிர்மறையாக இருக்கிறது. மிக மோசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு வரம்பு மாற்றங்கள் மத்திய வரி வருவாயிலிருந்து முன்னேறிய மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெருமளவு குறைத்து விடும் அபாயம் ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலிருக்கும் மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயில் பெரும் பகுதியை திருப்பி விடுவதற்கு வித்திட்டு விடும்.
 
பதினைந்தாவது நிதி ஆணையத்தின் 4(iii)ஆய்வு வரம்பு “ மத்திய அரசின் முக்கியத் திட்டங்களை நிறைவேற்றியுள்ள மாநிலங்கள்” என்ற அடிப்படையிலும் நிதி பகிர்வில் ஊக்கத்தொகை பரிந்துரைக்கலாம் என்று கூறுகிறது. முன்னேறிய மாநிலங்கள் தங்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் முக்கியமான சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி அதில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் மத்திய அரசு இப்படி முக்கியத் திட்டங்களை அறிவிக்கும் முன்பே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எல்லாம் சிறப்பான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றன. குறிப்பாக பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாடு போன்ற மாநிலம் அனைவருக்கும் மின்சாரம், அனைத்து கிராமங்களுக்கும்  சாலை வசதிகள்,  வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு எல்லாம் ரேசன் கார்டுகள், அனைவருக்கும் சமையல் எரிவாயு போன்ற திட்டங்களை மத்திய அரசின் திட்டங்களுக்கு முன்பே வெற்றி கரமாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது.  ஆகவே மத்திய திட்டம், மாநில திட்டம் என்று பாகுபாடு பார்க்காமல் தங்கள் மாநிலங்களில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியிருக்கும் மாநிலங்களுக்கு நிதி பகிர்வு செய்து கொடுக்க பரிந்துரைப்பதற்கு பதிலாக மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு மட்டும் ஊக்கத் தொகை என்று 4(iii)-ல் சொல்லப்பட்டுள்ள ஆய்வு வரம்பு பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல- மிகுந்த கண்டனத்திற்குரியது.
 
இன்னொரு ஆய்வு வரம்பான 4(Viii) “ஒரு வரையறைக்குள் கவர்ச்சித் திட்டங்களுக்கு செலவு செய்தது அல்லது அப்படி வரையறை ஏதுமின்றி கவர்ச்சித்திட்டங்களுக்கு செலவு செய்தது” என்ற அடிப்படையில் மத்திய நிதி ஆணையம் நிதி பகிர்வு குறித்து பரிந்துரை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு நிதி ஆணையம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு நிறைவேற்றும் திட்டத்தில் எது கவர்ச்சித் திட்டம் என்று முடிவு செய்வது அடிப்படையில் ஜனநாயக விரோதமானது. மாநிலங்களுக்கு எதிராக இப்படியொரு சிறிய கமிட்டிக்கு எதேச்சாதிகார அதிகாரத்தை வழங்க யாருக்கு உரிமை இருக்கிறது? இது அரசியல் சட்ட விரோதம் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை மீறும் செயல் என்றும் நான் நம்புகிறேன். முன்பு அமைக்கப்பட்ட மத்திய நிதி ஆணையங்களின் ஆய்வு வரம்பில் “உதவி தேவைப்படும் மாநிலங்கள்” என்று இருந்த வாசகம் பதினைந்தாவது மத்திய நிதி ஆணைய ஆய்வு வரம்பில் இடம்பெறவில்லை என்பதால், 1(ii) என்ற ஆய்வு வரம்பின் கீழ் “வருவாய் இடைவெளி” அடிப்படையில் மாநிலங்களுக்கு மத்திய நிதி ஆணையம் எந்த உதவியும் செய்யப் போவதில்லை என்று தெரிகிறது. ஆகவே மாநிலங்களின் கருத்துக்களை பெறாமல் நியமிக்கப்பட்ட மத்திய நிதி ஆணைய உறுப்பினர்களுக்கு மாநிலங்களில் நிறைவேற்றப்படும் திட்டங்களில் “கவர்ச்சித்திட்டம்” எது என்று நிர்ணயிக்கும் உரிமையைக் கொடுத்திருப்பது மாநில உரிமைகள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்றே கருதுகிறேன். வருவாய் பற்றாக்குறையை படிப்படியாக நீக்க வேண்டிய பொறுப்பு எப்போதும் மாநிலங்களிடமே இருக்க வேண்டும். அந்த பொறுப்பு தொடர வேண்டும் என்று கருதுகிறேன். மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களில் சிலவற்றை “கவர்ச்சித் திட்டங்கள்” என்று மத்திய நிதி ஆணையம் பிரித்து, அதற்கான செலவுகளை மாநிலத்தின் ஒட்டு மொத்த செலவிலிருந்து குறைத்து விட்டு (மாநிலத்தின் கருத்தைக் கேட்காமலேயே) மத்திய வரி வருவாயிலிருந்து நிதி பகிர்வை பரிந்துரைத்து விட்டால் மாநிலங்களின் நிதி நிலைமை என்ன ஆவது? என்ற கேள்வி எழுகிறது.
 
கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம் என்று மத்திய அரசு பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால் ஐந்து வருடங்கள் மாநிலங்களின் சிறப்பான நிர்வாகத்திற்கு தேவையான நிதி பகிர்வை பரிந்துரை செய்யும் மத்திய நிதி ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள ஆய்வு வரம்பு கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாக மட்டுமல்ல- சிறப்பாக செயல்படும் மாநிலத்தின் நிதி சரியாக செயல்படாத மாநிலத்திற்கு கிடைக்கும் நிலையை உருவாக்கி விட்டது.
 
மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக இருக்கும் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு வரம்பு 3(V)ன்படி ஜி.எஸ்.டி செயல்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய நிதி ஆணையம் ஆய்வு செய்யும் போது, ஜி.எஸ்.டி கவுன்சிலில் இது குறித்து முன் கூட்டியே விவாதித்து மாநிலங்களிடமிருந்து ஒரு ஆலோசனையை  மத்திய நிதி அமைச்சர் பெற்றிருக்க வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது.
 
மொத்தத்தில் மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமலும், முறையாகவும் உருவாக்கப்படாத ஆய்வு வரம்பினால் மாநிலங்களின் நிதி தன்னாட்சி ஏதோ ஒரு நகராட்சியின் அந்தஸ்துக்கு தரம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புக அதிகம் இருக்கின்றன என்று நான் கருதுவது நியாயமானது என்றே எண்ணுகிறேன்.
 
ஆகவே மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு எதிராக பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜி.எஸ்.டி. கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து உடனடியாக திருத்தியமைக்க வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மத்திய வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிப்பகிர்வினால் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாமலும், அந்த அநீதி மூலம் மாநிலங்களில் மனக்குறையும் மனக்குமறுலும் ஏற்பாடாமல் இருக்கவும் மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்பில் உடனடியாக திருத்தங்களை கொண்டு வருவது மட்டுமே சிறந்த வழி என்று நான் எண்ணுகிறேன்.
 
நிறைவாக தாங்கள் நலமுடன் இருக்கவும், நாட்டின் நலனுக்காக தாங்கள் முன்னின்று எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.
 
சார்ந்த செய்திகள்