2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 09.40 மணி அளவில் தொடங்கி நடைப்பெற்றது. கிட்ட தட்ட 300 பேருக்கு இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க உள்ளவர்களுக்கு ஏற்கனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா இல்லை என சான்று அளிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் செயற்குழு கூட்டத்திற்கான அழைப்பு கடிதம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ஏற்கனவே செயற்குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் இந்த இரண்டு கடிதத்தோடு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் செல்போன்களை அணைத்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் மாடியில் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்களுக்கு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. செயற்குழுவிற்கு வந்த தொண்டர்களிடம் ஓ.பி.எஸ். முகம் பொறித்த மாஸ்க் தாராளமாக விநியோகிககப்பட்டு வருகிறது. இதனால் அதிமுகவின் செயற்குழு அடுத்த கட்ட பரபரப்பிற்கு நகர்ந்து சென்றிருக்கிறது.