கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் மூலம் பின்னோக்கி இழுக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதிவரும் தொடரில் அவர் கூறியதாவது,
கிராம மேம்பாடே எங்கள் கொள்கை, அங்கு என்ன செய்யப்போகிறோம் என்பதே எங்கள் திட்டம். வளமான தமிழகத்துக்கான விதையை விதைத்துள்ளோம். மக்கள் நீதி மய்யம் இலக்கை அடையும், தமிழகம் சிறக்கும். மதுரை பொதுக்கூட்டத்திற்கு வந்தது கூட்டப்பட்ட கூட்டமன்று, அழைக்காமல் வந்த அன்பலை.”கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் மூலம் பின்னோக்கி இழுக்க வேண்டாம்”. கல்வியின் தரத்தையும் வளத்தையும் நமக்கேற்றபடி உருவாக்கிக்கொள்வதே சரி. நீட் தேர்வுக்கு ஆதரவு இல்லை என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு.
பெண்களின் ஓட்டுகளை வாங்க பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாவதவர்களாக ஆக்க முடியாது. அப்படி மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பெரிய கொலைகள் பல நடக்கும். மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது, இது உடம்பு கேட்கும் வியாதி. குடிப்பதைக் குறைக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக நிறுத்தமுடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது என்பதே என் கருத்து.
நானும், ஸ்ரீதேவியும் அண்ணன் - தங்கை போல்தான். முதல் 3 படங்களில் ஐயய்ய மறுபடியும் ஸ்ரீ தேவி ஜோடியா என்ற நிலையில் தான் இருந்தேன். வெற்றி ஜோடி ஆன பிறகு எங்களை கேட்காமலேயே அவர்களை ஒப்பந்தம் செய்தார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.