Published on 25/05/2020 | Edited on 25/05/2020

60 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. மாஸ்க்குடன் கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் பிளாஸ்டிக் மாஸ்க்கையும் அணிந்து விமான பயணிகள் பயணம் மேற்கொண்டனர். விமான பணிப்பெண்களும் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் முழு கவச உடையை அணிந்திருந்தனர்.
சென்னையிலிருந்து முதல் விமானமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானம் டெல்லி புறப்பட்டது. பயணிகள் வருகை குறைவால் 260 பேருக்குப் பதில் 111 பேருடன் முதல் விமானம் புறப்பட்டுச் சென்றது. பயணிகள் குறைவால் முதல் நாளிலேயே சென்னையிலிருந்து செல்லும் 15 விமானங்களும், சென்னைக்கு வரும் 13 விமானங்களும் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.