Skip to main content

போராட்டத்தை ஒடுக்க சதி நடக்கிறது... தமிமுன் அன்சாரி பேச்சு...

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

 

உன் நாட்டைக் காக்க... போராடு...
உன் வீட்டைக் காக்க... போராடு...
உன் மண்ணைக் காக்க... போராடு...
உன் மனையைக் காக்க... போராடு...
உன் உயிரைக் காக்க... போராடு...
உன் உரிமைக் காக்க... போராடு...
 

என மாணவர் தலைவர் கண்ணையா குமார் எழுப்பிய விடுதலை முழக்கம் போல தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இன்று காலை குடியுரிமைச் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான முழக்கங்கள் ஒலித்தன.

 

 citizenship-amendment-bill-chennai




எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள், களச் செயல்பாட்டாளர்கள் என எல்லோரையும் ஒருங்கிணைந்த இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, திராவிடர் கழகத்தின் அருள்மொழி, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது மற்றும் பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 
 

 citizenship-amendment-bill-chennai-


 

அரசியல் சட்டத்தை இயற்றி தந்த அம்பேத்கர் மணிமண்டபத்தில் இந்த போராட்டத்தை நடத்துவதற்கு போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காவல்துறையில் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அங்கு அனுமதி அளிக்க மறுத்த காவல்துறை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த மட்டுமே அனுமதி அளித்தது. உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. மேலும் போராட்டத்தை விரைவில் முடித்துக்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. 

 

 citizenship-amendment-bill-chennai



குடியுரிமைச் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான இந்த போராட்டத்தின்போது, பறை இசை முழக்கம், கானா பாடல்கள், கலை வடிவத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. 

 

 citizenship-amendment-bill-chennai


 

அம்பேத்கர் மணிமண்டபத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க மறுத்ததோடு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு சாமியானா பந்தல் போடக்கூட அனுமதி அளிக்கவில்லை. டிசம்பர் 26ஆம் தேதி சூரிய கிரகணம் எல்லோரும் வெளியே போகலாமா, வேண்டாமா என்று யோசித்த நேரத்தில், தொலைக்காட்சிகளில் விவாங்கள் நடந்த நிலையில், அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள், களச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களின் உரிமைகளை காக்க, நாட்டைக் காக்க, இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்க என சேப்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் குரலை உயர்த்தினர். நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் சிறப்பாக இந்த போராட்டம் நடந்ததாக தெரிவிக்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

 

​    ​citizenship-amendment-bill-chennai



இந்தப்போராட்டத்தின்போது தொடக்க உரையாற்றிய மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இந்த போராட்டத்தை அரசியல்வாதிகள் நடத்தவில்லை. யாரும் தலைமையேற்று நடத்தவில்லை. எந்த அமைப்பும் முன்னெடுத்து தனித்து நடத்தவில்லை. ஒட்டுமொத்தமாக அசாமில் இந்த போராட்டம் நடந்தது. வடகிழக்கு மாநிலங்கள், வடமாநிலங்கள் என நடந்து தென்இந்தியா வரை மக்கள் எழுச்சியாக இந்தப் போராட்டம் நடக்கிறது. இதை திசைத் திருப்புவதற்காக ஏதாவது அசம்பாவிதம் நடத்தி முஸ்லீம்கள் மீது பழியை போட்டு, சிறுபான்மையினர் மீது பழியை சுமத்தி இந்தப் போராட்டத்தை ஒடுக்க சதி நடக்கிறது. இந்த எச்சரிக்கையை நாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 

 

சார்ந்த செய்திகள்