Published on 28/05/2019 | Edited on 28/05/2019
இன்று காலை காவிரி ஆணைய கூட்டம் கூடியது. இந்த கூட்டம் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது.

டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் மசூத் உசேன் தலைமையிலான காவிரி ஆணைய குழு குறுவை சாகுபடிக்காக கர்நாடகா அணைகளிலிருந்து, தமிழ்நாட்டிற்கு 9.2 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இந்த 9.2 டிஎம்சி என்பது ஜூன் மாதத்திற்குரிய அளவாகும்.

இந்த கூட்டம் முடிந்தபின்பு ஆணைய தலைவர் மசூத் அசாரை, நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் செல்வராஜ் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.