Published on 05/03/2020 | Edited on 05/03/2020
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களை தடுக்க கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்தது.

அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெறும் சட்ட விரோத போராட்டங்கள் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிஏஏவுக்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.