Published on 31/05/2020 | Edited on 31/05/2020

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்த மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஐம்பது சதவிகித பொது போக்குவரத்தை இயக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கான போக்குவரத்துக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.