Skip to main content

10ஆம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி! - சிவகங்கை மாவட்டம் முதலிடம்!

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
10th

 

 


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.1% விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 9.5 லட்சம் பேரில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 92.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.4% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் 98.38% பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் 98.26% பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளது. 5,584 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.  5,456 அரசுப் பள்ளிகளில்  1,687 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன என கூறினார்.

மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 28ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்