கரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடபட்டு கிடந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி கல்வி துறை சார்பில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று உத்தரவு வெளியிடப்பட்டது.
இதற்கிடையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 567 ஆசிரியர்கள் 700க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களின் கருத்துகளை கேட்டு அதன்படி பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன் கருத்து கேட்பு கூட்டமானது தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெற்றோர்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கபட்டனர்.
இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி திறப்பது குறித்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். இதில் பெரும்பாலான பெற்றோர்கள் 12 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கலாம் என்பதை பெரும்பான்மையாக தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கருத்து கேட்பு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.