
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா A1 குற்றவாளி என்பதால் சட்டசபையில் படத்தை திறக்க கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை அம்பத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சொத்துக் குவிப்பு வழக்கில் A1 குற்றவாளி ஜெயலலிதா என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது. ரஜினியும், கமலும் சினிமாவில் எனக்கு சீனியர்கள், ஆனால் அரசியலில் அவர்கள் எனக்கு ஜூனியர்கள் தான்.
கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் நீட் தேர்வு வேண்டும். பணம் கொடுத்து மருத்துவ சீட் பெற முடியாததால் நீட் தேர்வு அவசியம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தேமுதிக எப்போதும் தயாராக உள்ளது. தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல கையை கூட ஊன்ற முடியாது. அவ்வாறு ஊன்றினால் பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.