வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் வன விலங்குகளை நாம் எந்த நேரத்திலும் இரவானாலும், பகலானாலும் பார்க்கலாம். எப்படியென்றால் பூங்காவில் "லைவ் ஸ்ட்ரீமிங்" செய்யப்படுகிறது. அங்குள்ள ஒவ்வொரு விலங்கின் இருப்பிடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும் அதன் வழியே நீங்கள் பார்க்கலாம். இதனைப் பார்க்க அறிவியல் அண்ணா உயிரியல் பூங்காவின் இணையதள பக்கத்திற்கு சென்றால் அதில் பூங்காவில் உள்ள அனைத்து உயிரினங்களின் புகைப்படங்கள் இருக்கும் அதனை கிளிக் செய்தால் நாம் அந்த விலங்கின் செயல்பாடுகளை இருந்த இடத்திலிருந்த காணலாம்.
ஆனால் பகலில் பார்த்தால் தெளிவாக தெரியும் இரவில் ஓரளவுக்குதான் தெரியும். நீங்கள் நேரடியாக பார்க்க வேண்டுமென்றால் கூட இணையதள பக்கத்திலே நுழைவுசீட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் அதில் எத்தனை நபர்கள், சிறியவர், பெரியவர் எத்தனை பேர் எந்த தேதியில் செல்ல உள்ளீர்கள் என்றெல்லாம் குறிப்பிடவேண்டும். மேலும் இந்த வலைத்தளத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா சம்பந்தமான அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் அனைத்து தகவல்களையும்தெரிந்துகொள்ளலாம். நீங்கள் விலங்குகளை காண இந்த https://www.aazp.in/live-streaming/ லிங்குக்குள் சென்றால் பார்க்கலாம் .