திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், மீசநல்லூர் கிராம ஊராட்சியில், பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மாவட்ட மினரல் ஃபவுண்டேஷன் நிதி, மாவட்ட தொழில் மையம், கால்நடை பராமரிப்புத் துறை, ஆகிய துறைகளின் கீழ் 6.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 இருளர் குடும்பங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மார்ச் 14ந்தேதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மீசநல்லூரில் கட்டப்பட்டு வரும் 100 இருளர் குடியிருப்பு வீடுகள், 2016-2017 ஆம் ஆண்டு பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கழிப்பறை வசதியுடன் தலா ரூ.2.65 இலட்சம் வீதம் ரூ.2.65 கோடி மதிப்பீட்டிலும், மழைநீர் கால்வாய் கட்டமைப்பு ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மின்சார வசதி தலா ரூ.15,000 வீதம் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டிலும், 60,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சமுதாயக் கூடம் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டிலும், அங்கன்வாடி மையம் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டடம் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டிலும், நவீன பூங்கா ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மாடு கொட்டகை ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டிலும், என மொத்தம் ரூ.4.42 கோடி மதிப்பீட்டிலும், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மாவட்ட மினரல் ஃபவுண்டேஷன் நிதி திட்டத்தின் கீழ் 2018-2019 ஆம் ஆண்டு திறந்தவெளி கிணறு ரூ.15.50 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் ஆண்டு 390 மீட்டர் சிமெண்ட் சாலை ரூ.27.20 இலட்சம் மதிப்பீட்டிலும், 950 மீட்டர் தார் சாலை ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டிலும், செங்கல் சூளை அமைக்க மாவட்ட தொழில் மையம் மூலமாக லாரி, ஜெ.சி.பி. இயந்திரம், 2 டிராக்டர் உட்பட உபகரணங்கள் ரூ.81.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக செங்கல் சூளை அலுவலகம் மற்றும் பம்ப் அறை ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டிலும், தொழிலாளர்கள் தங்கும் நிழற்கூடம் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சேமிப்பு கொட்டகை ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டிலும், கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக 100 கறவை பசுக்கள் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டிலும், என மொத்தம் ரூ.2.19 கோடி மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் ரூ.6.61 கோடி மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
இதே மீசநல்லூர் கிராமத்தில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திக் கீழ் 2015-2016 ஆம் ஆண்டு ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 2017-2018 ஆம் ஆண்டு மூலதன மான்ய நிதி திட்டம், 2018-2019 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.32.00 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1.76 கோடி ரூபாயில் 43 இருளர் குடும்பங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய வீடுகள் கட்டி 2018 அக்டோபர் மாதம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இங்கு வாழும் இருளர் இன மக்களின் பெரும்பாலான குழந்தைகள் நல்ல உணவும், சத்தான உணவும் சாப்பிடுவதில்லை எனக்கேள்விப்பட்டு உடனடியாக அதிகாரிகள் மூலமாக உணவு சமைத்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அதோடு அவர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டது. அவர்கள் அங்கே அமர்ந்து சாப்பிட அவர்களுடன் கலெக்டர் கந்தசாமி உட்பட அதிகாரிகள் அனைவரும் அமர்ந்து உணவு உண்டனர். அங்கிருந்த இருளர் இன மக்கள் கண்கலங்கி அதிகாரிகளுக்கு நன்றி கூறினர்.