Skip to main content

மாநில அரசுகளை மத்திய அரசு மதிக்கவில்லை... அதிகாரத்தைக் குவிக்கவே பார்க்கிறார்கள் - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

bf


உலகம் முழுவதும் கரோனா ஆட்டி படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அதன் பிடியில் இருந்து யாரும் தப்பவில்லை. உலக நாடுகள் எல்லாம் அதன் கோரப்பிடியில் சிக்கித்  தவிக்கின்றன. இதற்கிடையே சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகி பலியாகிறார்கள்.

இந்நிலையில் நாடு முழுவதும் கரோனா பீதி உச்சகட்டத்தில் இருக்கும் போது சில மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல் வெளியாகியள்ளது. அது குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியதாவது, "அதிகாரம் என்பது கோடாரியைப் போன்ற ஒன்று, ஜனநாயகம் என்பது பென்சிலை போன்றது. பென்சிலைக் கொண்டு எவ்வளவு கலை நயம் மிக்க பொருட்களைக் கூட உருவாக்கலாம். அப்படி என்றால் பென்சில் என்பது மிகப்பெரிய சமூக உருவாக்கத்துக்குப் பயன்படுகின்ற ஒன்றாக இருக்குமேயானால் அதைக் கூர்மை படுத்துகின்ற பொறுப்பு அந்த கோடாரிக்கு இருக்க வேண்டும். அந்த கோடாரி என்பது அதிகாரத்தைக் குவித்துக்கொண்டே சென்றால், அது பென்சிலைப் பிளக்கக்கூடியதாக மட்டுமே இருக்குமே தவிர பென்சிலைக் கூர்மைப்படுத்துவதாக இருக்காது. கனமான கோடாரியை வைத்துக்கொண்டு நீங்கள் பென்சிலைக் கூர்மைப்படுத்தி விட முடியாது. கோடாரியைப் போன்றே இன்று மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துகொண்டே செல்கிறது. 

அதனால் அது மாநில அரசுகளைத் துச்சமென மதிக்கின்றது. அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒருபோதும் செய்வதில்லை. இந்த மத்திய அரசு என்கிற கோடாரி பென்சிலை கூர் தீட்டப்போகின்றதா அல்லது உடைக்கப்போகின்றதா என்பதில்தான் நம்முடைய கவலை எல்லாம் இருக்கின்றது.  மத்திய பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து தங்களிடம் அதிகாரத்தைக் குவிப்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். மாநில அரசின் அதிகாரத்தைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாகக் குறைத்து வருகிறார்கள். இன்றைக்கு மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவை கொண்டுவந்துள்ளார்கள். இந்தியாவே கரோனாவை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் போது மாநில உரிமைகளை நசுக்கும் பொருட்டு இந்த மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவைக் கொண்டுவந்துள்ளார்கள். பொருளாதாரத்தின் அடிப்படையாக இன்று இருப்பது மின்சாரம். மின்சாரம் இல்லாமல் எதுவுமே இயங்காத நிலையில் இன்றைய நவீன உலகம் இருக்கின்றது. எனவே வணிகச் செயல்பாடுகளுக்கு மின்சாரம் என்பது மிக முக்கியமான ஒன்று. அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் மின்சாரத்தைப் பொறுத்த வரையில் ஒரு தெளிவான சட்டத்தை வரையறுத்து கொடுத்தார். 
 

http://onelink.to/nknapp


பெரிய நிறுவனங்களிடம் மின்சாரத்தை லாப நிலையில் விற்று அதில் வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு சிறுகுறு விவசாயிகள், பொதுமக்களுக்கு மானிய விலையில் மின்சாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று வரையறுத்தார். அதனால்தான் இன்றைக்கு விவசாயம் என்பது ஏதோ கைக்கும் வாய்க்கும் பிழைக்ககூடிய அளவில் இருக்கின்றது. விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கின்றது. ஆனால் உழவுப் பொருட்களை உரிய விலை கொடுத்து அவர்கள் வாங்கவில்லை. இலவசத்துக்கு எதிராகப் பேசுபவர்கள் எல்லாம் இதை எதற்கு இலவசமாக விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள் என்று பேசலாம். ஆனால் அது ரொம்ப தவறான ஒன்று. தற்போது அதில் கை வைக்க பார்க்கிறார்கள். நம்மிடம் இனி மின்சாரத்துக்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனை வங்கியில் போட்டுவிடுவதாகக் கூறுவார்கள். ஆனால் அரசு மானியத்தை எந்த லட்சணத்தில் வழங்கும் என்று நமக்குத் தெரியும். 

 

 

சார்ந்த செய்திகள்