Skip to main content

அரசின் அன்பளிப்பு கிடையாது... என் சேமிப்பு பணம் ஒரு பைசா கூடவரவில்லை... ஓய்வு பெற்ற அரசு ஊழியர் போராட்டம்

Published on 24/09/2019 | Edited on 24/09/2019
Government Employees


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 
 

போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் என்பவர் நம்மிடம் பேசுகையில், 
 

2015ல் இருந்து உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படவில்லை. எங்களுக்கு பென்ஷன் 8ஆம் தேதியா, 10ஆம் தேதியா, 15ஆம் தேதியா என்று எந்த தேதியில் வருகிறது என்றே தெரியவில்லை. ஆகையால் 1ஆம் தேதி அன்று பென்ஷன் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அரசின் மற்ற துறைகளில் இருப்பதைப்போல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எங்களுக்கு அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

 

Government Employees



 

 

2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சுமார் 3 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கான ஓய்வூதியப்பலன்கள் இதுவரை ஒரு பைசா கூடவரவில்லை. ஓய்வூதிய பலன்களை விரைவில் வழங்க வேண்டும். உதாரணத்திற்கு நானே இருக்கிறேன். மாநரக போக்குவரத்து கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றேன். 36 ஆண்டுகள் சர்வீஸ் உள்ளது. எனக்கு ஒரு பைசா கூட இதுவரை கிடைக்கவில்லை. என்னுடைய சேமிப்பு பணம். என்னுடைய மாதாந்திர சம்பளத்தில் இருந்து சிறுக சிறுக சேமித்த பணம். அரசினுடைய அன்பளிப்பு கிடையாது.
 

எங்கள் கோரிக்கைகளை பலமுறை துறைச்செயலாளர், நிர்வாக இயக்குநர்களை சந்தித்து முறையிட்டும் பலனளிக்காததால் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினோம் என்றார்.