Skip to main content

'330 மில்லியன் யூரோக்கள் செலவில் சிலை வைத்திருப்பது முட்டாள்தனமானது...' சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக் குறித்து லண்டன் அமைச்சர் கருத்து

Published on 08/11/2018 | Edited on 08/11/2018

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள நர்மதா நதி கரையில், ’ஒற்றுமையின் சிலை’ எனும் உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை அமைக்கும் பணியில் 3,500 தொழிலாளர்கள் நான்கு வருடங்களாக ஈடுபட்டு. கிட்டத்தட்ட ரூ 3,000 கோடி செலவு செய்து, 597 அடி உயரத்தில் சிலை கட்டப்பட்டது. இதனைக் கடந்த 31-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

 

pp

 

 

இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் வந்தது. இதுவரை உள்நாட்டில் இருந்து மட்டுமே வந்த எதிர்ப்புக் குரல், சமீபத்தில் வெளிநாட்டில் இருந்தும் வந்துள்ளது. லண்டன் அமைச்சர் பீட்டர் போன் (peter bone), இந்த சிலை வைப்பதற்காக செய்யப்பட்ட செலவு முட்டாள்தனமான செயல் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

2013-ல் 268 மில்லியன் யூரோக்களும், 2014-ல் 278 மில்லியன் யூரோக்களும் மற்றும் 2015-ல் 185 மில்லியன் யூரோக்களையும் லண்டனிடமிருந்து கடனாய் பெற்றிருக்கிறது இந்தியா. இதனுடன் சேர்த்து மொத்தம் லண்டனிடம் இருந்து 1.17 பில்லியன் யூரோக்களை இந்தியா கடனாகப் பெற்றிருக்கிறது. அதே சமயம் 330 மில்லியன் யூரோக்களை செலவு செய்து சிலை வைத்திருப்பது முட்டாள்தனமானது மற்றும் மக்களை பைத்தியம் பிடிக்கவைக்கும் செயல் எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் இந்தியாவிற்கு பணம் தந்து உதவ வேண்டும் என்ற என்னமே இல்லை எனறும் தெரிவித்துள்ளார்.

 

pp

 

 

லண்டனிடமிருந்து கடனாய் பெறப்படும் பணம் இந்தியாவில் பெண் உரிமையை மேம்படுத்துதல், சோலார் பேனல்கள் மற்றும் கார்பன் குறைவான போக்குவர்து போன்ற விஷயங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 2014-ல் படேல் சிலையின் அடித்தளம் அமைக்கப்பட்டபோது, மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட 14,000 யூரோக்களை அம்மாநிலத்தின் அரசு செலவு செய்துள்ளது.

 

யோகாவை தூக்கிவைத்து கொண்டாடும் மோடி அரசில், அதை நாட்டு மக்கள் மத்தியில் பரப்புவதில் மட்டும் கவனம் செலுத்திவருகிறது. ஆனால் அதே நிலையில் லண்டன், 86,616 யூரோக்களை முதலீடு செய்து யோகா மூலமாக மனிதனை மாரடைப்பில் இருந்து காப்பாற்றமுடியுமா என்பதை ஆராய்ச்சி செய்துள்ளது. மற்றும் பெண் விஞ்ஞானிகளை இந்தியாவில் இருந்து லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைகழகத்திற்கு 1,00,000 யூரோக்களை செலவு செய்து அழைத்து சென்றுள்ளது.