ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிக்கே இரட்டை இலை என முன்பே சொன்ன நக்கீரன்
பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சரத்யாதவ் - மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமாருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தேர்தல் ஆணையம் வரை சென்றது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி கட்சியும், சின்னமும் நிதிஷ்குமாருக்கு கொடுத்து தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. அன்றைய தினம் நாம், நக்கீரன் இணையதளத்தில்
பீகார் பாணியில் இரட்டை இலையா?
OPS-EPS மகிழ்ச்சி! சசிகலா கண்ணீர்!
என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். ( செய்தியை படிக்க கிளிக் செய்யவும் )
இந்தநிலையில் 23.11.2017 வியாழக்கிழமை இரட்டை இலை சின்னம் தொடர்பான 83 பக்க அறிக்கையை வெளியிட்டது தேர்தல் ஆணையம். ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.