ஆந்திராவில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு பலூன்கள் பறக்கவிட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒருநாள் பயணமாக, ஆந்திர மாநிலம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது, அந்த விமான நிலையத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. இதனையும் மீறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கவுசல் தெரிவித்துள்ளார்.