Skip to main content

நானும் ரவுடிதான் என்று மார்தட்டும் ஈ.பி.எஸ். -

Published on 02/01/2018 | Edited on 02/01/2018
நானும் ரவுடிதான் என்று மார்தட்டும் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.: கதிர்காமு கிண்டல்

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9எம்.எல்.ஏக்கள் தாங்கள் வகித்து வந்த அ.தி.மு.க பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் கூட்டாக  அறிவிப்பை இன்று வெளியிட்டனர்.

அவர்களுடைய அறிவிப்பு குறித்து நக்கீரன் இணையதளத்திடம் தேனி மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் கே. கதிர்காமு கூறியது...

மறைந்த முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாதான் எனக்கு மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் பொறுப்பு கொடுத்தார். கட்சியில் இருந்து நீக்குவதற்கும், புதிய பொறுப்புகளை கொடுப்பதற்கும் பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. 

இதற்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வன் உள்பட சிலரையும், தற்போது 9 பேரையும் பொதுச்செயலாளர் நீக்கினாரா அல்லது அந்த பொறுப்பில் தற்போது உள்ள துணைப்பொதுச்செயலாளர் நீக்கினாரா. இவர்கள் இருவரும் நீக்காதபோது மற்றவர்கள் விடும் அறிக்கைகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கட்சியினரும், பொதுமக்களும் அதனை ஏற்க மாட்டார்கள்.



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை தாங்க முடியவில்லை. அந்த ஆற்றாமையை வெளிப்படுத்தும் விதமாக இதுபோன்று அறிக்கை வெளியிடுகிறார்கள். மேற்கொண்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தினகரன் அணிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இதுபோன்று செய்து கொண்டிருக்கிறார்கள். 

கட்சி பொறுப்பில் இருந்து நீக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளதே தவிர, இவர்களாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என ஒரு பொறுப்பை போட்டுக்கொண்டு அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்பது, நானும் ரவுடிதான் என்று வடிவேலு சொல்வதைப் போன்றதுதான் என்றார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்