Skip to main content

இன்ஜினியரிங் படிச்சா வேலை இல்லையா...? எண்ணத்தை மாற்றும் சர்வே முடிவுகள்...

Published on 21/11/2018 | Edited on 21/11/2018

இந்தியாவில் இன்ஜினியரிங் கல்வி, நெருக்கடி காலகட்டத்தில் உள்ளது. கடந்த சில வருடங்களில் வெளிவந்த பல சர்வே முடிவுகள், பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்த வேலைவாய்ப்பு திறனே உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில் தற்போது வந்துள்ள சர்வே முடிவுகள் ஆச்சரியம் தரும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன. மற்ற மாணவர்களை ஒப்பிடும்போது, இன்ஜினியரிங் மாணவர்கள்தான் அதிக வேலைவாய்ப்பு திறன் உடையவர்கள் என்று சர்வே தெரிவிக்கிறது. 

 

ee

 

 

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் திறமைகளை ஆய்வு செய்யும் நிறுவனங்களின் குழு ஒன்று வேலைவாய்ப்பு மற்றும் மாணவர்களின் திறன்களைப் பற்றிய கணக்கெடுப்புகளை எடுத்தது. வீபாக்ஸ் என்னும் மாணவர்களின் திறன்களை மதிப்பிடும் அமைப்பு, ஜூலை 15 முதல் அக்டோபர் 30 வரை சர்வே எடுத்தது. 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை சோதனை செய்தனர். இந்த சர்வே தொழில்நுட்ப கல்விக்கான அனைத்து இந்திய கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக சங்கம் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து எடுக்கப்பட்டது. 

 

ஆங்கிலம், சிந்தனை திறன் மற்றும் ஆப்டிட்யுடு தேர்வு (எண்ணியல் திறனாய்வு), கள அறிவு, நடத்தை செயல்பாடு ஆகியவற்றில் மாணவர்கள் சோதனை செய்யப்பட்டனர். MBA, MCA, B.E./B.Tech., BA, B.Com., B.Sc., B.Pharma., ஆகிய படிப்புகளில், அதிகபட்ச வேலைவாய்ப்பு திறன் உடையவர்களாக இன்ஜினியரிங் மாணவர்கள் உள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் 51.5% இருந்த இன்ஜினியரிங் வேலைவாய்ப்பு திறன், இந்த வருடம் 6 சதவீதம் அதிகரித்து 57.1% ஆக உள்ளது.  

 

ee

 

 

MBA-வை காட்டிலும் பொறியியல் பட்டதாரிகளில் வேலைவாய்ப்பு பெரும் திறமையான பட்டதாரிகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் MBA மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு திறனின் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. 2016-ல் 8% இருந்த வித்தியாசம், இந்த வருடம் 21% ஆக அதிகரித்துள்ளது. B.Sc. படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. சென்ற வருடம் 33.6% இருந்த B.Sc.  வேலைவாய்ப்பு திறன், இந்த வருடம் 13 சதவீதம் அதிகரித்து 47.4% ஆக உள்ளது.  

 

ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு முந்தைய வருடத்தில் 45%ல்லிருந்து 47.8% ஆக அதிகரித்துள்ளது. பெண்கள் வேலைவாய்ப்பு, முந்தைய கணக்கெடுப்பில் 38% ஆக இருந்தது. இந்த வருடம் 46% ஆக பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. 
 

சர்வே வருடம்      2016 2017 2018 2019
வேலைவாய்ப்பு திறன் (%) 38.1 40.4 45.6 47.8

 

 

 

 

e

 

சம்பள எதிர்பார்ப்புகளை பொறுத்தவரை, 70% முதல் வேலை தேடுபவர்கள் (Freshers) கிட்டத்தட்ட தங்கள் முதல் சம்பளம் வருடாந்திரம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகம் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 47% மாணவர்கள் தங்கள் முதல் ஊதியம் ரூ.2.6 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

 

2018-ல் முதல் இடத்தில் இருந்த ஆந்திரா, இந்த வருடமும் முதல் இடத்தில் தொடர்கிறது. சென்ற வருடம் 9-ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2019-ல் 10 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெஸ்ட் பெங்கால், டெல்லி, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகியவை 2 முதல் 9 இடங்களில் உள்ளது. நகரங்களில் பெங்களுரு முதல் இடத்திலும், சென்னை இரண்டாம் இடத்திலும் உள்ளது. 

 

பரிவர்த்தனை சம்பந்தமான வேலைகளில் கிட்டத்தட்ட 40% முதல் 50% புதிய தொழில்நுட்பமான ஆட்டோமேசன் துறைக்கு மாறியுள்ளது. நிதி சேவைகள், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, போக்குவரத்து பேக்கேஜிங் மற்றும் கப்பல் ஆகியவற்றில் ஆட்டோமேசன் சேவை அதிகமாக உள்ளது. அர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் (செயற்கை அறிவுத்திறன் – Artificial Intelligence), டேட்டா அனலிடிக்ஸ் (Data Analytics) மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு (ஆர் & டி) ஆகியவை 2019-ல் முக்கிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.