நேற்றோடு வேட்புமனுதாக்கல் நிறைவுபெற்றது. இதில் தேசிய கட்சி வேட்பாளர்கள், மாநில கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்தனர்.
இவர்களுடனேயே ‘டம்மி வேட்பாளர்கள்’ (Dummy Candidates) என்பவர்களும் வேட்புமனுதாக்கல் செய்தனர். அது என்ன டம்மி வேட்பாளர்கள் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.
டம்மி வேட்பாளர்கள் என்றவுடன் அது வேட்பாளர்களின் குறை என்று நினைக்க வேண்டாம். பிரதான வேட்பாளர் தனக்கு சப்ஜூட்டாக ஒரு வேட்பாளரை நிறுத்துவார். ஒருவேளை இந்த பிரதான வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலோ அல்லது அவரால் தேர்தலில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டாலோ அவருக்கு பதிலாக இவர் அக்கட்சியின் வேட்பாளராக இருப்பார். இல்லையென்றால் இவர் தனியாக இருந்துகொண்டே அந்த கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்பார். இவர்கள் அந்த டம்மி வேட்பாளர்கள்.