
காஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
ஜெயேந்திரர் மறைவு குறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை பாரதம் இழந்திருக்கிறது. இந்து ஆன்மிகவாதி என்று தமிழகத்தில் பல்வேறு நம்பிக்கையை கொண்டவர்கள் அவரை விமர்சனம் செய்யும் போதுக்கூட அவர் தனது பணியில், குறிப்பாக சமூக பணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை தருகிறது இந்து மதம் என்ற கொள்கையை எடுத்துக் கூறுவதில் மிக சிறப்பான ஒரு பணியை ஆற்றினார்.
அவரின் மறைவு உண்மையிலையே நமக்கு பெரும் அதிர்ச்சியை தருகிறது. அவரின் பக்தர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.