கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பா.ஜ.க.வுக்கு தமிழக அளவில் ஒரு அரசியல் திருப்பு முனையாக இருந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில்தான் பா.ஜ.க.வைச் சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன் கோவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அதன்பிறகு கோவை தொகுதி தனக்கே வேண்டும் என சி.பி.ஆர். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது தி.மு.க. அதற்கு மோடி அலையே காரணமாக சொல்லப்பட்டது.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆனபிறகும், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. தரப்பில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கவில்லை என்று கவலையில் இருக்கின்றனர் பா.ஜ.க.வினர். "லோக்கல் மினிஸ்டர் பொள்ளாச்சி தொகுதியில் குறியாய் இருக்கிறார். மா.செ.வும், கோவை வடக்கு எம்.எல்.ஏ.வுமான அருண்குமாரைத் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் யாரும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. இத்தனை நாட்களுக்குப் பிறகு 30-ந்தேதிதான் பிரச்சாரத்தையே தொடங்குகிறோம்'' என்கிறார்கள் சோர்வுடன்.
அதேசமயம், "மாநகராட்சி மற்றும் மறைந்த சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜின் தொகுதி என தலா ஆறு செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் உடன்பிறப்புகளோடு பொதுமக்கள் மத்தியில் உற்சாக உலா வருகிறார்'' என்கின்றனர் தோழர்கள்.
சிறு, குறு தொழில்கள் நசுங்கிப் போச்சு. நூறு ரூபாயா இருந்த கேபிள் கட்டணத்தை ரூ.200 ஆக்கிட்டாங்க. இவ்வளவு ஏன், நம்ம சிறுவாணித் தண்ணியையே பிரான்ஸ்காரனுக்கு வித்துட்டாங்க''’என பி.ஆர்.என். சொல்லும்போதெல்லாம் கூடியிருக்கும் பெண்கள் ஆமாஞ்சாமி... ஆமாஞ்சாமி'’’ என ஆதங்கத்துடன் ஏற்றுக்கொள்கின்றனர்.
பா.ஜ.க. தரப்பு மதரீதியில் உறுதிமொழி கொடுக்கும் என்பதை அறிந்திருக்கும் பி.ஆர்.என்., மருதமலை முருகன் கோவிலுக்கு எத்தனையோ கட்டடங்களை, படிக்கட்டுகளை கட்டிக்கொடுத்த சாண்டோ சின்னப்பத்தேவருக்கு, மருதமலை அடிவாரத்தில் சமுதாயக்கூடம் அமைப்போம்''’என உறுதியளித்திருப்பது பெரிதாய் எடுபடுகிறது. ""ஆக்கிரமிப்புகளால் அழிவைச் சந்தித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் எழிலைக் காக்க நட வடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் கூறி யிருப்பதும் அதிக கவனம் பெற்றிருக்கிறது.
"சிறு, குறு தொழிற்கூடங்களின் கூட் டமைப்பினர், "ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும் என தி.மு.க. கூட்டணி வாக்குறுதி அளித்திருப்பதால் அவர்களுக்கே எங்களது ஆதரவு'’என அறிவித் திருப்பது தி.மு.க. கூட் டணியை மேலும் உற் சாகம் அடையச் செய் திருக்கிறது'' என்கிறார்கள் தோழர்கள்.