Skip to main content

தீபாவளி ரேசில் இணைந்த விக்ரம் பிரபு படம்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

vikram prabhu raid movie to release in coming diwali

 

விக்ரம் பிரபு நடிப்பில் இந்தாண்டு தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வருகிறது. பொன்னியின் செல்வன் 2, பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் இறுகப்பற்று. சமீபத்தில் வெளியான இறுகப்பற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இதனிடையே இயக்குநர் முத்தையா வசனத்தில், ரெய்டு என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். கனிஷ்க் மற்றும் மணிகண்ணன் தயாரிக்கும் இப்படத்தை கார்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடத் திட்டமிட்டது. சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. 

 

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என போஸ்டர் ரிலீஸாகியுள்ளது. ஏற்கனவே தீபாவளி ரேசில் கார்த்தி - ராஜு முருகன் கூட்டணியில் உருவாகும் ஜப்பான், கார்த்திக் சுப்புராஜ் - ராகவா லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட படங்கள் இருக்கும் நிலையில் தற்போது விக்ரம் பிரபு படமும் இணைந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்தியுடன் மீண்டும் இணைந்த ஸ்ரீதிவ்யா

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
karthi 27 update sri divya as heroine

'ஜப்பான்' படத்தைத் தொடர்ந்து கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரேம் குமார் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வந்தார். கார்த்தியின் 27வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

கார்த்தியின் 27வது படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்திற்கு ‘மெய்யழகன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும் ஸ்ரீ திவ்யா மற்றும் சின்னத்திரை நடிகை ஸ்வாதி கொன்டே இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்ரீ திவ்யா கார்த்தியுடன் காஷ்மோரா படத்திற்குப் பிறகு மீண்டும் நடித்துள்ளார்.

Next Story

ஆதரவளித்த ரசிகர்களுக்கு ‘இறுகப்பற்று’ படக்குழு நன்றி

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

irugapatru thanks note for fans support

 

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த்,  ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிஜமாகவே ஒரு நல்ல மருத்துவரின் கவுன்சிலிங்கை கேட்டுவிட்டு வந்தது போல இருந்ததாகவும், படம் நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல தம்பதிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். 

 

திரையரங்கு வெற்றிக்குப் பிறகு நவம்பர் 6 முதல் பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிக்ஸில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆனது. ஓடிடியிலும் பலரது கவனத்தை பெற்று டாப் 10 ட்ரெண்டிங் பட்டியலில் இறுகப்பற்று தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், பார்வையாளர்களின் ஆதரவிற்கு இறுகப்பற்று படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. இப்படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.