முதியோர் உதவித்தொகை வேண்டுமென முதியவர் ஒருவர் ஆட்சியரின் காலில் விழ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த 72 வயது முதியவர் ஒருவர் ஆட்சியரைச் சந்திக்க முயன்றார். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அங்கு வந்த நிலையில் திடீரென அந்த முதியவர் அவருடைய காலில் விழ முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று முறை பதிவு செய்தும் தனக்கு முதியோர் உதவித்தொகை வரவில்லை. எப்படியாவது எனக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுக் கொடுங்கள் என கேட்டுக் கொண்டதோடு திடீரென எதிர்பாராத விதமாக ஆட்சியரின் காலில் விழ முயன்றார். அப்பொழுது ஆட்சியர் இம்முறை கண்டிப்பாக உங்களுக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்கும் என தெரிவித்தார்.
நாய்க்கனேரி பகுதியைச் சேர்ந்த அந்த முதியவர் பென்ஷனுக்காக காலி விழுந்ததாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.