Skip to main content

'விஜய்யின் பரந்தூர் பேச்சு...'-அரசியல் தலைவர்கள் கருத்து

Published on 21/01/2025 | Edited on 21/01/2025
tvk

நேற்று பரந்தூர் சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர்  விஜய் பரப்புரை வாகனத்தில் இருந்தபடி பேசுகையில், “கிட்டத்தட்ட 910வது நாட்களுக்கு மேலாக உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டத்தைப் பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசினார். அந்த குழந்தையோடு பேச்சு மனதை ஏதோ செய்துவிட்டது. உடனே உங்கள் எல்லோரையும் பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது.

நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டை தானே இங்கேயும் எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா?. உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களுடைய வசதிக்காக அவர்களோடு நிற்கிறதும், அவர்களோடு நிற்காமல் இருக்கிறதும், நாடகம் ஆடுறதும் நாடகம் ஆடாமல் இருக்கிறதும். அது சரி, நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே. அதையும் மீறி விவசாயிகள் போராட ஆரம்பித்தால் பிரச்சனை தான். அதனால் இனிமேல் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். உங்களுடைய விமான நிலையத்திற்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடங்களை பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்' என தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய்யின் பேச்சு குறித்து பல்வேறு  அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு விஜய்யின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில் ''போயிட்டு வரட்டும் நல்லது தான்...' என ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.

dmk

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், ''அது அவருடைய விருப்பம். அவருடைய உரிமை. அவர் கேட்டார் சந்திக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள் சந்திக்கிறார்'' என தெரிவித்தார்.

mdmk

அதேபோல்  திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவிக்கையில், ''விஜய்யை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். பரந்தூர் பகுதியை பொறுத்தவரைக்கும் அங்குள்ள  நிலத்தை கையகப்படுத்துவதில் கிராம மக்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது. கடந்த காலத்தில் பல எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள். அந்த மக்களுடைய கருத்துக்களை கேட்பதற்காக விஜய் அங்கு போகிறார். அது தவறு கிடையாது. தமிழக அரசும் அதற்கான ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறார்கள்.

mdmk

விஜய்யை பொறுத்தவரை அங்கு போகலாம் சந்திக்கலாம் ஆனால் வரைமுறைகள் படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு நடிகரால் சட்ட ஒழுங்கு பிரச்சனை பிரச்சனை ஆகிவிடக்கூடாது. அதனால அந்த பகுதி மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என விதிமுறைகள் விதித்துள்ளார்கள். இது தமிழக அரசினுடைய ஒத்துழைப்போடு செய்து கொடுத்திருக்கிறார்கள். விஜய் போவதும் தவறு கிடையாது'' என்றார்.

சார்ந்த செய்திகள்