நடிகை தேவயானி தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்துவதில்லை. இருப்பினும் தற்போது ‘கைக்குட்டை ராணி’ என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்த நிலையில் இப்படம் குழந்தைகளின் உணர்வுகளை பற்றி பேசுகிறது.
அதாவது ஒரு பெண் குழந்தை தாயை இழந்து தந்தை வெளியூரில் பணிபுரியும் சூழலில் வளரும் போது எத்தகைய சில்லகல்களை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் 7வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. விருதினை தேவயானி பெற்றுக் கொண்டார்.
முதல் முறையாக தேவயானி இயக்கிய குறும்படம் சர்வதேச அளவில் விருது பெற்றுள்ளதால் அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.