![Trailer release of the movie starring Nani, Nazriya](http://image.nakkheeran.in/cdn/farfuture/YQrgQdWz9j7QPgRhe7-yjJtZRecWUt00-shz0FlpDAk/1654176494/sites/default/files/inline-images/Untitled-12_10.jpg)
தமிழ் சினிமாவிற்கு 'நேரம்' படம் மூலமாக அறிமுகமானவர் நஸ்ரியா. பிறகு சில படங்களில் நடித்த நஸ்ரியா ஃபகத் ஃபாசிலை திருணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த நஸ்ரியா 2018-ல் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'கூடே' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்டி சுந்தரானிகி' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரோகிணி, நதியா, அழகன் பெருமாள் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் 'அண்டி சுந்தரானிகி' படத்தின் ட்ரைலரரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வேறு மதத்தைச் சார்ந்த இரண்டு பேர் காதலிக்கின்றனர், இரண்டு பேர் வீட்டிற்கும் இவர்கள் காதலிப்பது தெரிந்து, இரு வீட்டாரிடமும் பயங்கர எதிர்ப்பு வருகிறது. இந்த எதிர்ப்புகளை தாண்டி அவர்கள் வீட்டின் சம்மதத்துடன் சேர்ந்தார்களா இல்லை பிரிந்தார்களா என்பதை காமெடி கலந்து சொல்லியிருப்பது போல் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழில் 'அடடே சுந்தரா' என்றும் மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.