Skip to main content

தங்கலான் பட அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

thangalaan movie update

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான்'.  ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  

 

இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக முன்பு ஒரு செய்தியாளர்களின் சந்திப்பில் பா.ரஞ்சித் தெரிவித்த நிலையில், படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பின் மேக்கிங் வீடியோ மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. இதையடுத்து படம் அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. 

 

இந்த நிலையில் தங்கலான் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், "தங்கலான் படத்தின் முக்கியமான அப்டேட் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் அறிவிக்கவுள்ளோம். கிட்டத்தட்ட டீசரும் ரெடியாகிவிட்டது. அதனால் டீசரோடு அந்த அறிவிப்பும் இருக்கும்" என்றார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்