![soorarai potru](http://image.nakkheeran.in/cdn/farfuture/QgIgm2GlwsNS_AlGIiiXPBOBUXMNgzkjA2JS6J83WAA/1598084646/sites/default/files/inline-images/soorarai-potru_2.jpg)
அண்மையில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' என்னும் படத்திலிருந்து 'காட்டுப்பயலே' என்னும் பாடல் வெளியிடப்பட்டது.
சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
முதலில் இப்படத்தை திரையரங்கில்தான் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீரென சூர்யா படத்தினை அமேசான் ப்ரைமில் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளராக அவர் எடுத்துள்ள இந்த முடிவை மற்றவர்கள், அவரது ரசிகர்கள், திரையுலகை சார்ந்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் ரிலீஸுக்கு வைத்திருந்த ஐந்து கோடி ரூபாய் பணத்திலிருந்து பலருக்கு உதவி செய்ய பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.