![sivakarthikeyan ar murugadoss movie update](http://image.nakkheeran.in/cdn/farfuture/f7nEFDCBOowJ-g37A0nse2AqYeD8npoewJCIvn0qe0s/1739628468/sites/default/files/inline-images/121_50.jpg)
ஏ.ஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் இன்னும் பெயரிடப்படாத தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
இப்படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் கடந்த சில மாதங்களாக வெளியாக நிலையில் தற்போது ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்தியேன் பிறந்தநாள் வருகிற 17ஆம் தேதி வரவுள்ளதால் அதை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தெரிகிறது.
இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாததால் அதன் குறித்த அறிவிப்பு மற்றும் அதோடு டைட்டில் டீசரும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதோடு படத்தின் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் இந்த அப்டேட்டில் இருக்கும் எனப் பரவலாக பேசப்படுகிறது. இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The wait ends now! Brace yourselves for a massive #SKxARM updates.
💣💥 pic.twitter.com/mgwVE3btke— A.R.Murugadoss (@ARMurugadoss) February 15, 2025