பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் தற்போது இயக்குநர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல்வேறு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது.
![sid sriram](http://image.nakkheeran.in/cdn/farfuture/VNAAJgFarWp0Gj8mmHfETjf5qm7qzIVDB6oca35iQxE/1562664813/sites/default/files/inline-images/sid-sriram.jpg)
இதனிடையே, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வானம் கொட்டட்டும் என்ற தலைப்பில் ஒரு படம் தயாரிக்கப்படுகிறது. படைவீரன் என்ற படத்தை இயக்கிய தனா என்பவர்தான் இந்த படத்தையும் இயக்கவுள்ளார்.
விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக '96' படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஒப்பந்தமானார். ஆனால், அவர் தற்போது பிஸியாக இருப்பதால், அவருக்குப் பதிலாக சில முன்னணி இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கடைசியில் பல்வேறு வெற்றி பாடல்களை பாடிய சித் ஸ்ரீராமை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது படக்குழு.
'வானம் கொட்டட்டும்' படத்தின் கதை, வசனத்தை மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.