Skip to main content

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் நடிக்கும் படம் ரிலீஸ் ஆகிறது 

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
senthil ganesh

 

விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதிய செல்ல தங்கையா இயக்கிய “கரிமுகன்“ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார் செந்தில் கணேஷ். காயத்ரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் செல்ல தங்கையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சம்பவம் குறித்து இயக்குனர் செல்ல தங்கையா பேசியபோது... 

 

 

 

"கரிமுகன் படத்திற்காக திருக்கோளக்குடி என்ற கிராமத்தில் உள்ள பெரிய மலையில் ஒரு காதல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருத்போது, அமைதியான அந்த காட்டுப்பகுதியில் திடீரென்று ஸ்பீக்கர் சத்தம், நாங்கள் மைக்கில் பேசிய சத்தம் கேட்டு தேனீக்கள் படக்குழுவினரை துரத்தி துரத்தி கொட்ட ஆரம்பித்து விட்டது. தேனீக்கள் கொட்டியதால் நான் உட்பட 15 பேர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டோம். உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவர்களை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்துவிட்டு. மறுநாள் பக்கத்தில் இருந்த வேறொரு மலையில் படிப்பிடிப்பை முடித்தோம். படம் இம்மாதம் 26 ம் தேதி வெளியாக உள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்