![Quentin Tarantino last movie update](http://image.nakkheeran.in/cdn/farfuture/vOkFEdXVR5WSLtrUXgDezYxq1NMfffq716EnItZCZtM/1678878003/sites/default/files/inline-images/69_37.jpg)
நான் லீனியர் திரைக்கதை, ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள், டார்க் காமெடி உள்ளிட்ட அம்சங்களை தனது படங்களில் புகுத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டாரன்டினோ. ஹாலிவுட் ரசிகர்களை தாண்டியும் உலக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இவரது மேக்கிங்கிற்கு வரவேற்பு உண்டு.
தன் படங்களுக்கென ஒரு ரசிகர்களை வைத்திருக்கும் குவென்டின் டாரன்டினோ, வருகிற 27ஆம் தேதி (27.03.2023) தனது 60வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். முன்னதாக ஒரு பேட்டியில், "தனது 60வது வயதிற்குள் சினிமாவில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். மேலும் ஓய்வு பெறுவதற்குள் 10 திரைப்படங்களை இயக்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது கடைசி படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தி மூவி க்ரிட்டிக்' என்ற தலைப்பில் இப்படம் உருவாகவுள்ளதாகவும் பிரபல திரைப்பட விமர்சகர் பவுலின் கேலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக இப்படம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.