
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஆச்சார்யா'. 'கொனிடேலா ப்ரொடக்ஷன் கம்பெனி' தயாரித்துள்ள இப்படத்தை கொரடாலா சிவா இயக்கியுள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். தந்தை, மகன் என இருவரும் இணைந்து நடித்துள்ளதால் இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருந்தது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ரசிகர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால் விநியோகஸ்தர்கள் சிரஞ்சீவியிடம் நஷ்ட ஈடு கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 'ஆச்சார்யா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மே 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அமேசான் ப்ரைம் நிறுவனம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.