![fsafas](http://image.nakkheeran.in/cdn/farfuture/tz_MXO8bvwmV-lQopxX7TVHFc87Le1b_IoFUGr15fZ0/1610545934/sites/default/files/inline-images/Ernb8vJUcAEJr5a.jpg)
துள்ளுவதோ இளமை படம் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதையடுத்து இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் செல்வராகவன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் மீண்டும் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். செல்வராகவனின் 12வது படமாக உருவாகும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் 13ஆம் தேதி இன்று வெளியிடப்படவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு 'நானே வருவேன்' பெயரிடப்பட்டுள்ளது.