![mamta mohandas about rajini movie experience](http://image.nakkheeran.in/cdn/farfuture/7AQajgfRMsfsu5LRTJjJHiZTEbRjnq3XLOBhbVSotRg/1678711885/sites/default/files/inline-images/83_36.jpg)
மலையாளத்தில் பல படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ் தமிழில் விஷால் நடித்த சிவப்பதிகாரம் படம் மூலம் அறிமுகமானார். மேலும் பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார். இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாராவால் குசேலன் படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் வேறு ஒரு படப்பிடிப்பின் நடுவில் இருந்தபோது துபாயிலிருந்து குசேலன் படப்பிடிப்பிற்கு வந்தேன். குறிப்பாக ரஜினி சாருடன் ஒரு பாடலுக்கு என்னை அழைத்தார்கள். அந்த படப்பிடிப்பு 4,5 நாட்கள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் என்னுடைய பகுதி எடுக்கப்படவில்லை. பின்பு படத்தின் கதாநாயகிக்கு இன்னொரு நடிகை நடிப்பது குறித்து அவருக்கு சொல்லப்படவில்லை என்றும் அதனால் படப்பிடிப்புக்கு வர மறுத்துவிட்டதாகவும் புகார் கூறியதாக கேள்விப்பட்டேன். இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்குமென்று தெரியவில்லை. ஆனால் இதுதான் நான் கேள்விப்பட்டேன்.
எனக்கு வேறு யாராலும் அச்சுறுத்தல் இல்லை. ரஜினி சார் மீது எனக்கு மரியாதை இருப்பதால் தான் படப்பிடிப்புக்கு சென்றேன். இந்தப் பாடலில் நான் இருக்கமாட்டேன் என்றும் நினைத்தேன். அதன்படியே படத்தில் என்னுடைய பின் ஷாட் மட்டுமே இருந்தது. நான் அணிந்திருந்த தொப்பியை மட்டுமே பார்க்க முடிந்தது. பின்பு ஒரு வாரம் கழித்து எனக்கு ரஜினி சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் நன்றி சொல்ல அழைத்தார்" என்றார்.
பி. வாசு இயக்கத்தில் வெளியான குசேலன் படத்தில் ரஜினி, பசுபதி, மீனா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.