Published on 13/02/2025 | Edited on 13/02/2025
![art director Suresh Kallery passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/NAw5Cgbpkb_lCbN9g1t09tEjtOxYgmcW1-I6ICaWNLo/1739438625/sites/default/files/inline-images/167_27.jpg)
தமிழ் சினிமாவில் கலை இயக்குநராக வலம் வந்தவர் சுரேஷ் கல்லேரி. ஜீவா நடித்த தெனாவட்டு, சசிகுமார் நடித்த குட்டிப் புலி, ஜி.வி.பிரகாஷ் நடித்த ஜெயில், அர்ஜுன் தாஸ் நடித்த ‘அநீதி’ உள்ளிட்ட பால் படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிருக்கிறார். கடைசியாக மணிகண்டன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்தில் பணியாற்றியிருந்தார்.
இந்த நிலையில் சுரேஷ் கல்லேரி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். நள்ளிரவு 12.30 மணியளவில் காலமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது திடீர் மறைவு திரையுலகத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தற்போது இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.