ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
அதே சமயம் நடிகர் ரஜினி தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனையொட்டி நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'லால் சலாம்' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த க்ளிம்ஸ் வீடியோ ரஜினி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக இன்று மாலை நடிகர் ரஜினியின் 170வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு ‘வேட்டையன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசரில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி வருவது குறிப்பிடத்தக்கது.