Published on 18/03/2024 | Edited on 18/03/2024




தர்புகா சிவா இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மீதா ரகுநாத். தொடர்ந்து விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான குட் நைட் படத்தில் நடித்திருந்தார். இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கடந்த மாதம் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இதையடுத்து இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அவருக்கு தற்போது திரை பிரபலங்கள் உள்ளிட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.