Skip to main content

‘கூலி’; ரஜினியை உற்று நோக்கும் லோகேஷ்(படங்கள்)

Published on 15/03/2025 | Edited on 15/03/2025

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, சத்யராஜ், மலையாள நடிகர் சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்து வருகின்றனர். முன்னதாக இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை(14.03.2025) முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பிரத்யேக புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்