Published on 01/12/2022 | Edited on 01/12/2022





தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக வலம் வரும் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். 'தேவராட்டம்' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களது திருமணம் கடந்த மாதம் 28ஆம் தேதி (28.11.2022) எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.