Published on 03/04/2023 | Edited on 03/04/2023







40 வருட பாரம்பரிய குட்லக் ப்ரிவியூ திரையரங்கம், குட்லக் ஸ்டூடியோஸ் எனும் பெயரில் மீண்டும் உதயமானது.
திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்படச் செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி தொடங்கியுள்ளனர். முக்கியமான திரைப் பிரபலங்கள் மற்றும் தமிழகத்தின் அரசியல் ஆளுமைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தார்.