இந்தியாவையே உலுக்கிய சம்பவமான ஷீனா போரா என்ற இளம்பெண்ணின் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
காணாமல் போன ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி மற்றும் சஞ்சய் கண்ணாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்திராணிக்கும் சித்தார்த் தாஸ் என்பருக்கும் பிறந்த குழந்தைகளான ஷீனா போராவையும், மிக்கெல் போராவையும் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, கொல்கத்தாவில் உள்ள பெரும் பணக்காரர் ஒருவரிடம் இந்திராணி பழக்கம் கொள்கிறார். இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...
கொல்கத்தாவில் உள்ள பெரும் பணக்காரரான ஒருவருடன் பழக்கம் கொண்ட இந்திராணி, பணக்காரரின் மனைவி போட்ட சண்டையால், அந்த உறவில் இருந்து இந்திராணி வெளியே வந்துவிடுகிறார். மேலும், அந்த பணக்காரர் தனது நண்பர் பஞ்சாப்பைச் சேர்ந்த சஞ்சய் கண்ணாவை உதவி செய்வதற்காக இந்திராணிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். ஓரளவு பணக்காரரான சஞ்சய் கண்ணா, இந்திராணியோடு பழக ஆரம்பித்து இருவரும் சம்மதித்த பின்னால் 1993ல் இவர்களுக்குள் பஞ்சாபி முறைப்படி திருமணம் நடக்கிறது. இவர்களுக்குள் விதி என்ற பெண் குழந்தை பிறக்கிறது. இதற்கிடையில், இவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு, கருத்து வேறுபாடுகளால் இந்திராணி விவகாரத்து வழக்கு தொடர்கிறார். ஆனால், இந்திராணியை பிரிய மனமில்லாமல் சஞ்சய் கண்ணா விவகாரத்து கொடுக்க மறுக்கிறார். 9 வருடம் ஒன்றாக சேர்ந்த வாழ்ந்த இந்திராணி, பணியின் வளர்ச்சிக்காக மும்பை சென்று கன்செல்டன்ஸி கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடத்துகிறார்.
இந்த நிலையில் தான், இந்திராணி பீட்டர் முகர்ஜியை சந்திந்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்கிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட நான்காவது சந்திப்பிலேயே இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இந்திராணிக்கு ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் விவகாரத்து வழக்கை முடிப்பதற்கு பீட்டர் முகர்ஜி ஒரு பிரபலமான வழக்கறிஞரை கொண்டு இந்த வழக்கை முடித்து வைக்கிறார். இந்திராணிக்கு டைவர்ஸ் கிடைத்ததற்கு பின்னால், 2003இல் பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்துகொள்கிறார். பீட்டர் முகர்ஜி தலைவராக இருக்கும் ஸ்டார் நெட்வொர்க்கிலேயே இந்திராணியும் வேலை செய்கிறார். இந்திராணி சொன்னதன் பேரில், பீட்டர் முகர்ஜி தனியாக ஐஎன்எக்ஸ் என்ற டிவி சேனலை தொடர்கிறார். அந்த சேனலில், இந்திராணி சிஇஓவாக இருக்கிறார். அந்த சேனலை சில மாதங்கள் கழித்து 9 எக்ஸ் பெயராக மாற்றுகிறார்கள்.
இந்திராணிக்கு திருமணம் ஆனதை கேள்விப்பட்ட இந்திராணிக்கு பிறந்த ஷீனா போராவும் மிக்கெல் போராவும், இந்திராணியை சந்திக்க வேண்டுமென்று மெயில் போடுகிறார்கள். அதன் பேரில், இந்திராணி, அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கே சென்று பேசுகிறார். பீட்டர் முகர்ஜி அறிமுகம் செய்து வைக்கும் போது, நீங்கள் தன்னுடைய தங்கை, தம்பி என்று தான் சொல்ல வேண்டும் என்று இந்திராணி அவர்களுக்கு பொய் சொல்லுமாறு கூறுகிறார். அந்த உடன்படிக்கைக்கு அவர்கள் சம்மதித்த பின்னால், அவர்கள் இருவரையும் மும்பைக்கு அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார். இதற்கிடையில், பீட்டர் முகர்ஜியின் மகனான ராகுல் முகர்ஜியோடு ஷீனா போராவுக்கு பழக்கம் ஏற்படுகிறது. தங்களை காட்டிலும் விதி என்ற மகளுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதால், மனமுடைந்த ஷீனா போரா, அங்கிருந்து வெளியே வந்து ராகுல் முகர்ஜியோடு ஒன்றாக தங்கி லிவ் இன் ரிலேஷன்சிப்பில் இருந்திருக்கிறார். பீட்டர் முகர்ஜியின் அதிகாரத்தால், ஷீனா போராவுக்கு காலேஜ் சீட்டு முதல் ரிலையன்ஸ் கம்பெனி வேலை வரை கிடைக்கிறது. அதன் பின், ஷீனா போராவை சஞ்சய் கண்ணா, இந்திராணி மற்றும் டிரைவர் ஷியாம்வர் ராய் ஆகியோர் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக விசாரணையில் தெரிகிறது. இந்த உண்மையை சம்பந்தப்பட சஞ்சய் கண்ணா, இந்திராணி என அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். ஆனால், ஷீனா போரா எதற்காக கொலை செய்யப்பட்ட விவரம் மட்டும் இன்னும் சரியாக தெளிவு பிறக்கவில்லை.
காவல்துறை முன்னால் இந்திராணி வாக்குமூலம் கொடுத்தாலும், மேஜிஸ்ரேட் முன்னால் ஷீனா போரா அமெரிக்கா சென்றுவிட்டதாக பொய்யை மட்டுமே சொல்கிறார். இதற்கிடையில், காட்டில் எரிக்கப்பட்டு வழிப்போக்கன் மூலம் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பரிசோதனை செய்ததில், அந்த எலும்பு ஷீனா போராவினுடையது இல்லை என ரிப்போர்ட்டில் வருகிறது. அந்த அறிக்கையின் பேரில், தன் மீது பொய் கேஸ் போடப்பட்டதாக கேஸ் ஒன்றை இந்திராணி போடுகிறார். அதே சமயம், கார் டிரைவரான ஷியாம்வர் ராய் கொடுத்த தகவலின் பேரில், அந்த இடத்தில் எடுத்த உடலை பரிசோதனை செய்தததில், அது ஷீனா போராவினுடையது என்று ரிப்போர்ட்டில் வருகிறது. அந்த டிஎன்ஏ வைத்து, மிக்கேல் போராவை பரிசோதனை செய்ததில், இந்திராணியின் மகன் தான் மிக்கெல் போரா என்று ரிப்போர்ட்டில் வருகிறது. ஷீனா போராவினுடைய பயோலஜிக்கல் தந்தையான சித்தார்த் தாஸை போலீசார் தேடி கண்டுபிடித்து விசாரித்ததில், ஷீனாவும், மிக்கெல் போராவும் தனக்கும் இந்திராணிக்கும் பிறந்த குழந்தைகள் என ஒப்புக்கொள்கிறார். இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது. இந்த கொலை வழக்கு தவிர, ஸ்டார் நெட்வொர்க்கில் இருந்து தனது கம்பெனியை நடத்துவதற்கு அங்கிருந்து ஏராளமான பணவரித்தனை ஊழலை இந்திராணியும், பீட்டர் முகர்ஜியும் செய்திருக்கிறார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தி பீட்டர் முகர்ஜி மீது வழக்கு ஆகிறது. அந்த வழக்கின் அடிப்படையில், பீட்டர் முகர்ஜியை கைது செய்து நான்கு வருடம் சிறையில் இருக்கிறார். இந்திராணி 6 வருடமும், டிரைவர் ஷியாம்வர் 7 வருடமும் சிறையில் இருக்கின்றனர். அதன் பிறகு, சஞ்சய் கண்ணா உள்பட அனைவருக்கும் ஜாமீன் கிடைத்துவிடுகிறது.
பெற்ற மகளை தங்கை என்று பொய் சொல்லி கொலை செய்த காரணத்தினால், இந்திராணிக்கு பீட்டர் முகர்ஜி டைவர்ஸ் கொடுத்து தான் தங்கியிருந்த வீட்டையும், 400 கோடி பணமும் அவருக்கு கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தன்னுடைய வாழ்க்கையை இந்திராணி படமாக எடுத்தும் வெளியிட்டிருக்கிறார். அந்த படத்தில் கூட, தன்னை சிறு வயதில் தன்னுடைய அப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அப்போது பிறந்த குழந்தை தான் ஷீனா போரா என பொய்யாக சொல்லி வருகிறார். 2015ல் இருந்து ஷீனா போரா உயிரோடு தான் இருக்கிறாள் என்ற பொய்யை மட்டுமே சொல்கிறார். தான் தப்பிப்பதற்காக, பல பத்திரிகைகளில் கூட பொய் மட்டுமே சொல்லி வருகிறார். இந்த வழக்கை இப்போது சிபிஐ தான் நடத்தி வருகிறது.