மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் இந்தியா பிரிவு ‘பி’ யில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவுடன் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கொரோனாவிற்கு முன் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. மூன்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் நடக்க உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்மன் பிரீத்கர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்மிரிதி மந்தனா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில், “ஹர்மன் பிரீத்கர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், செஃபாலி வர்மா, ஹர்லின் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா,ராஜேஸ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், ரேனுகா தாக்கூர், மேக்னா சிங், அஞ்சலி சர்வாணி, பூஜா வஸ்தர்கார், ஷிகா பாண்டே” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.