Skip to main content

7 மாத குழந்தைக்கு பாலியல் தொந்தரவு.. ராஜஸ்தான் புதிய சட்டத்தால் தூக்கு!

Published on 21/07/2018 | Edited on 21/07/2018

ராஜஸ்தான் மாநிலத்தில் 7 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளைஞருக்கு, அம்மாநிலத்தின் புதிய சட்டத்தின் மூலம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 
 

Rape

 

 

 

பெண்களைப் பேணும் நாடு என்ற நிலை, இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதே அதற்கு உதாரணம். இதனைத் தடுக்க மத்திய அரசு போக்ஸோ சட்டத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கும்படியான சில மாற்றங்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் அந்தக் குற்றங்கள் குறைந்தபாடில்லை. 
 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலத்திலும் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது அரசு. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியில் சித்தரவதை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் 19 வயது இளைஞருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 7 மாத குழந்தையைக் கடத்திக் கொண்டுபோய் பாலியல் வன்புணர்வு செய்ததாக, 19 வயது இளைஞர் மீது குற்றம்சாட்டப்பட்டது. விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகள் குற்றத்தை உறுதிசெய்துள்ள நிலையில், தற்போது அந்த இளைஞருக்கு தூக்குதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.