உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி கடைசி 19 போட்டிகளில் சேஸிங் செய்து தோல்வியடைந்ததில்லை என்ற வரலாற்று சாதனை நேற்று இந்தியாவால் தகர்க்கப்பட்டுள்ளது. 1999-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் 275 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் ஆஸ்திரேலியா அணி தோற்றது. அதற்கு பிறகு சேஸிங்கின் போது இந்திய அணியுடன் நேற்றைய போட்டியில் தான் தோல்வியடைந்துள்ளது.
இந்தியாவின் பிளஸ்:
இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான், ரோஹித் ஆகியோர் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோரின் பவுலிங்கை கணித்து விளையாடினார்கள். 90 மைல் வேகத்தில் வந்த பந்துகளை நேர்த்தியாக சந்தித்து முதல் 10 ஓவரில் பொறுமையாக விளையாடிய நிலையில் விக்கெட் இழப்பின்றி அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர்.
நாதன் கொல்டர்-நைல், ஆடம் ஜாம்பா ஆகியோர் பவுலிங்கில் எளிதாக தவானும், ரோஹித்தும் ரன்களை குவித்தனர். 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முதல் 10 ஓவர்களை அவுட் ஆகாமல் கடந்த 38 போட்டிகளில் ரோஹித் 33 முறை 50+ ஸ்கோர் அடித்துள்ளார்.
பேட்டிங் செய்த அனைத்து வீரர்களும் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப விளையாடி அணியின் ரன் வேகத்திற்கு பலம் சேர்த்தனர். ஒருவர் மீது கூட குறை சொல்ல முடியாத அளவு பேட்டிங் இருந்தது.
வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் எளிதாக ரன்கள் அடிக்க முடியாத அளவிற்கு புவனேஷ் மற்றும் பும்ராவின் பவுலிங் அபாரமாக இருந்தது.
மிடில் ஓவர்களில் பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர். இது ரன் ரேட் விகிதம் 10+ என்றளவில் அதிகரிக்க உதவியது.
மேக்ஸ்வெல் அதிரடியை தொடங்கியபோது ஸ்டோனிஸ் மற்றும் ஸ்மித்தின் விக்கெட்டை புவனேஷ் குமார் வீழ்த்தினார். இதனால் மேக்ஸ்வெல் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா பிளஸ்:
கோலி பேட்டிங் செய்யும்போது தென் ஆப்பிரிக்கா அணி செய்ததை போலவே பெரும்பாலும் அவுட் சைடு ஃஆப் ஸ்டம்பிற்கு வெளியே பவுலிங் செய்தனர். தேர்டு-மேன் திசையில் சிங்கள் எடுப்பதை தடுத்து கோலியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான பின்ச் மற்றும் வார்னர் புவனேஷ் மற்றும் பும்ரா ஓவரில் நிதானமாக விளையாடினர். இந்த வருடம் புவனேஷ் குமாரின் 48 பந்துகளை சந்தித்து 25 ரன்கள் எடுத்து 4 முறை அவுட் ஆன பின்ச் இந்த போட்டியில் புவனேஷ் பவுலிங்கில் நிதானமாக ஆடினார்.
ஒருமுனையில் விக்கெட்கள் விழுந்து, டாட் பால் செய்ய ரன் ரேட் 13+ என்றளவில் தேவைப்பட்டது. அலெக்ஸ் கேரி 35 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேரியின் பேட்டிங் ஆஸ்திரேலியா அணிக்கு சற்று நம்பிக்கை அளித்துள்ளது.
ஆஸ்திரேலியா மைனஸ்:
ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் ஆட்டத்தின் துவக்கத்தில் விக்கெட் எடுக்க தவறி விட்டனர்.
மிடில் ஓவரில் விக்கெட்களை எடுக்க முடியாமல் ரன்களையும் வழங்கினார்கள். ஆஸ்திரேலியா அணியில் பலமான 5-வது பவுலர் இல்லாதது, இந்திய அணிக்கு பலமாக அமைந்தது.
ஆட்டத்தின் எந்தவொரு சூழ்நிலையிலும் வார்னரால் எளிதாக ரன்களை அடிக்க முடியவில்லை. அவரின் வழக்கமான ஆட்டம் நேற்று அமையாத அளவிற்கு இந்திய அணியின் வியூகம் இருந்தது.
அளவுக்கு அதிகமான ரன் ரேட் இறுதி கட்டத்தில் தேவைப்படுமளவுக்கு மிடில் ஓவர்களில் குறைவான ரன் ரேட்டில் விளையாடினார்கள்.
புவனேஷ் 40-வது ஓவரில் 3 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
இந்திய அணியின் வலுவில்லாத 5-வது பவுலரின் ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அணி தவறியது.
இந்தியாவின் மைனஸ்:
வலுவான 5-வது பவுலர் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக இருந்தது. ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் வேகம் சிறப்பாக இருந்தாலும், லைன் & லென்த் சீராக இல்லை. சில சமயம் பவுன்சர்களை வீசி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பாண்டியா, பவுலிங்கில் இன்னும் மேம்பட வேண்டியது அவசியம்.
டாப் 5 பேட்ஸ்மேன்கள் யாரும் பார்ட் டைம் பவுலிங் கூட செய்யாமல் இருப்பது இந்திய அணிக்கு சற்று பலவீனமாக உள்ளது.
சாதனைத் துளிகள் :
உலகக்கோப்பை தொடரில் இதுவரை நான்காவது முறையாக ஆஸ்திரேலியா அணியை வென்றுள்ளது இந்தியா.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியா அணியுடன் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.
இதற்கு முன்பு இங்கிலாந்து மைதானத்தில் 21 இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் எடுத்த விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் எடுத்து தவான் முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 40 இன்னிங்ஸ்களில் 2000 ரன்கள் எடுத்த சச்சின் சாதனையை 37 இன்னிங்ஸ்களில் 2000 ரன்கள் எடுத்து சர்மா முறியடித்துள்ளார். எந்ததொரு அணிக்கு எதிராகவும் குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்கள் அடித்த சாதனை இது.
ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 6-வது 100+ ரன்கள் அடித்துள்ளனர் ரோஹித், தவான் ஜோடி. ஐசிசி தொடர்களில் 6வது முறையாக 100+ பார்ட்னர்ஷிப் அடித்துள்ளனர். மொத்தமாக 16 முறை ரோஹித், தவான் ஜோடி 100+ பார்ட்னர்ஷிப் தந்துள்ளனர்.
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக தொடர்ந்து நான்கு 50+ ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
117, 125, 78, 21, 51* இவை இந்த மைதானத்தில் தவான் அடித்த ரன்கள்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சார்பில் 27 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக 26 சதங்கள் ஆஸ்திரேலியா வீரர்களால் அடிக்கப்பட்டுள்ளது.
புவனேஷ் 40-வது ஓவரில் 3 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
இந்திய அணியின் வலுவில்லாத 5-வது பவுலரின் ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அணி தவறியது.