Skip to main content

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று!

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என தலா மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 239 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது. மேலும், இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும் இந்திய அணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்