Skip to main content

திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரம்; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 03/10/2024 | Edited on 03/10/2024
Tirupati lat adulterated ghee issue; The court barrage of questions

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இது விவகாரம் தொடர்பாக, அம்மாநிலத்தில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதங்களுக்கு, திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் கொடுத்து வந்த நெய்யில் விதிமுறைகளுக்கு மாறாக விலங்கு கொழுப்பு கலந்ததாகப் புகார் எழுந்தது. மேலும் இந்த நிறுவனம் வழங்கிய நெய்யில் கலப்படம் இருப்பதாகக் குஜராத் நிறுவனம் நிறுவனம் ஒரு அறிக்கை வழங்கி இருந்தது. மேலும் திருப்பதி தேவஸ்தானமும், மத்திய அரசின் உணவுக் கட்டுப்பாட்டுத் தர நிறுவனமும்  ஏ.ஆர். நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அந்த நோட்டீஸில், ‘நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலப்படம் உள்ளதால் உங்கள் நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த நோட்டீஸை எதிர்த்தும், இதற்கு தடை விதிக்க கோரியும் ஏ.ஆர்.டைரி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Tirupati lat adulterated ghee issue; The court barrage of questions

அந்த மனுவில், ‘எங்கள் நிறுவனத்தில் எந்த கலப்படமும் இல்லாத நிலையில் மாட்டு கொழுப்பு  மற்றும் பல்வேறு பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதாகக் குஜராத் நிறுவனம் கொடுத்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிர்ணயம் அமைப்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விளக்க நோட்டீசை தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி இரண்டாவது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்குரிய விளக்கம் இரண்டாம் தேதி அளிக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது. இது தொடர்பாக உரிய விளக்கங்கள் அளிப்பதற்கான கால அவகாசம் வழங்கவில்லை. எனவே மத்திய அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதி தடை விதிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் இன்று (03.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஆர். டைரி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்வேறு சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மேலும், ‘சென்னையில் உள்ள கிங் நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த நெய்யில் எந்தவித கலப்படமும் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தின் நிறுவனம் வழங்கிய சான்று, தேவஸ்தானம் வழங்கிய சான்றிதழ்களில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் உள்ளது. மத்திய அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு வாரியம் தங்கள் நிறுவனத்தில் பரிசோதனை நடத்தியது. அது தொடர்பான முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தான் திடீரென்று நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. சட்ட விரோதம் ஆகும். எனவே இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

Tirupati lat adulterated ghee issue; The court barrage of questions

இதனையடுத்து மத்திய அரசு சார்பில், ‘பால் நிறுவனத்திற்கு உரியக் கால அவகாசம் தரப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘நெய்யில் கலப்படம் உள்ளது என எந்த சான்றிதழைக் கொண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எந்த சட்ட விதிகளின்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்பி உடனடியாக ஆஜராக வேண்டும் எனக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. இதனை ஏற்க முடியாது. கலப்படம் இருப்பதை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்ற பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துக்களுக்கு உட்பட்டு முறையாக விளக்கம் பெற்று நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஏற்கனவே அனுப்பிய நோட்டீசை தவிர்த்து விட்டு புதிதாக மத்திய உணவுக் கட்டுப்பாடு தர நிர்ணய அமைப்பின் சார்பில் திண்டுக்கல் ஏ.ஆர் நிறுவனத்திற்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் தான் விசாரணை நடத்த வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார்.

சார்ந்த செய்திகள்